தர்பூசணி பழத்தில் உள்ள அற்புதங்கள் !!!

share on:
Classic

கோடை காலம் துவங்கிவிட்டாலே உடல்சூடு, வியர்வை, சருமப்பிரச்சனை போன்ற பல்வேறு கோடைகால உபாதைகளை நாம் சந்திக்கின்றோம். கோடை காலங்களில் தண்ணீர் பந்தல், நீர் மோர் பந்தல், இளநீர், ஜூஸ், வெள்ளரிக்காய், தர்பூசணி போன்ற கடைகள் திடீரென முளைக்கின்றன. கோடை காலத்திற்கு மிகவும் ஏற்ற, நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணியில் நிறைய நன்மைகள் இருக்கின்றன.  

தர்பூசணி பழத்தில் 92 சதவீதம் நீர் சத்துகள் உள்ளது. குறிப்பாக கோடை காலத்தில் உடலின் சூட்டை குறைப்பதில் இந்த பழம் முதலிடம் பிடித்துள்ளது. தர்பூசணியில் வைட்டமின்கள், தாதுப் பொருட்கள்,ஊட்டச்சத்துக்கள் மிகுந்து காணப்படுகிறது.

தர்பூசணியை தினமும் சாப்பிட்டு வந்தால், கண் பார்வை, இதய செயல்பாடுகள், உடலின் நோய் எதிர்பு சக்தி அதிகரித்து சீராக இயங்கும் என கூறப்படுகிறது.

தர்பூசணியில் கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளது. இந்த பழத்தை தினமும் உட்கொள்வதால் உடல் எடை மிகவும் எளிதாக குறையும். ஒரு கப் தர்பூசணியில் 80 கலோரிகள் மட்டுமே உள்ளது.

தர்பூசணி உடலில் உள்ள அமிலத்தை சமநிலையில் பராமரிக்க உதவுகிறது. இதனால் உயர் இரத்த அழுத்தத்தின் ஆபத்தை தர்பூசணி குறைக்க உதவுகிறது.

பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் அமினோ அமிலங்கள் தர்பூசணியில் அதிகமாக காணப்படுகிறது. தர்பூசணி தொடர்ந்து சாப்பிடுவதால் இரத்த நாளங்களை ஆரோக்கியமாகவும்  இரத்த ஓட்டத்தை சீராக்குவதிலும் உதவுகிறது.  

தர்பூசணி  ஹார்மோன்களை சமநிலை செய்ய உதவுகிறது. தர்பூசணியில் வைட்டமின் ஏ மிகுந்து காணப்படுகிறது. இது கண் விழித்திரையில் உள்ள நிறமிகளை (pigments) தயாரிக்க உதவுகிறது.வைட்டமின் ஏ ஆரோக்கியமான தோல் மற்றும் பற்கள் நமக்கு அளிக்கிறது. 

News Counter: 
100
Loading...

Ramya