விளக்கெண்ணெய் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்..!!

share on:
Classic

விளக்கெண்ணெய் ஆமணக்கு செடியின் விதைகளினால் தயாரிக்கப்படுகிறது. இந்த எண்ணெயில் ரிசினோலியிக் ஆசிட் அதிகமாக உள்ளது. இந்த ஆசிட் ஒரு ஆன்டி பாக்டீரியல் மற்றும் அழற்சியை சரி செய்யும் ஒரு சிறந்த மருந்தாகும்.

அந்த காலத்தில் பெரும்பாலான மக்கள் அழகை பராமரிப்பதற்கு எண்ணெய்யை பயன்படுத்தி வந்தனர். குறிப்பாக பெண்கள் கூந்தலை நன்கு வளரச் செய்வதற்கு எண்ணெய்யை  பயன்படுத்துவர். இதனால் சரும அரிப்பு, கூந்தல் உதிர்தல் போன்ற பிரச்சனைகள் வருவதை தவிர்க்கப்படுகிறது.

விளக்கெண்ணெய் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளை பார்ப்போம் :

  • விளக்கெண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்து வந்தால், கைகளில் இருக்கும் சுருக்கங்கள் அனைத்து நீங்கிவிடும். மேலும் தினமும் இரவில் படுக்கும் முன் நகங்களில் விளக்கெண்ணெயை வைத்து வந்தால், நகங்கள் நன்கு பொலிவோடு அழகாக வறட்சியின்றி காணப்படும்.
  • முகத்திற்கு தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் கழுவினால், நீர்ச்சத்தின்றி காணப்படும் சருமம் ஈரப்பசையுடன் இருக்கும்.
  • தினமும் விளக்கெண்ணெய் தடவி வர, குதிகால்களில் இருக்கும் வறட்சி நீங்கி, வெடிப்புக்களும் விரைவில் போய்விடும்.
  • எண்ணெயை வைத்து, வாரத்திற்கு ஒரு முறை மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு குளித்தால், கூந்தல் வளர்ச்சியுடன் அடர்த்தியான கூந்தலையும் பெறலாம்.
  • விளக்கெண்ணெயில் சோடா உப்பு சேர்த்து கலந்து, மச்சம் உள்ள இடத்தில் தேய்த்து வர, திடீரென்று வந்த மச்சம் மறைய ஆரம்பிக்கும். இதனை தொடர்ந்து மச்சம் போகும் வரை செய்ய வேண்டும்.
  • விளக்கெண்ணெய் கொண்டு சருமத்தை தொடர்ந்து மசாஜ் செய்து வந்தால், தளர்ந்து காணப்படும் சருமம் இறுக்கமடைந்து, இளமை தோற்றத்தில் காணப்படும்.
News Counter: 
100
Loading...

Thaamarai Kannan