இதய நோய்க்கு சிறந்த மருந்து செம்பருத்தி...!!

share on:
Classic

சர்க்கரை வியாதிக்கு அடுத்ததாக வேகமாய் பரவும் நோய் இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் தான். சர்க்கரை வியாதி, உடல் பருமன், ரத்த அழுத்தம் என இவை எல்லாம் இறுதியில் இதய கோளாறுகளில்தான் முடிகின்றன.

இதய நோய்களை தடுக்க உணவில் ஆரோக்கியமானதை தேடிப் போக வேண்டும். அப்படி உங்கள் இதயத்திற்கு பலம் தரும் சில இயற்க்கை மருத்துவத்தை பார்ப்போம்.

செம்பருத்திப் பூ : செம்பருத்திப் பூ ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்கும் சக்தி உண்டு. தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு செம்பருத்திபூவின் மகரந்த தாளை நீக்கிவிட்டு , இதழ்களை சாப்பிட்டு வந்தால் இதய அடைப்பு கூட சரியாகிவிடும். இதய நோய்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை.

இதய வலி : ஒரு சிலருக்கு இதயத்தில் ஊசி குத்துவது போல் வலி வரும். அவர்கள் கருந்துளசி,செம்பருத்திப் பூ இரண்டையும் சேர்த்துக் கசாயம் செய்து காலை மாலை 10 நாட்கள் குடித்து வந்தால் இதய வலி குணமாகும். இதயத்திற்கும் பலம் தரும்.

இதய பலகீனம் : செம்பருத்திப் பூவை உலர்த்திப் பொடி செய்து அத்துடன் சம அளவு மருதம் பட்டை பொடியும் சேர்த்து பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் இதய பலகீனம் குணமாகும்.

இதய நோய்கள் குணமாக : துளசி இலைச்சாறு,தேன் ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்து வெந்நீரில் கலந்து காலை மாலை 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் அனைத்தும் நீங்கும்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan