500 ரூபாயில் இத்தனை சலுகைகளா? அசரவைக்கும் போஸ்ட்பெய்டு பிளான்

share on:
Classic

’உள்ளங்கையில் உலகம்’ என்ற இன்றைய வாழ்க்கை சூழலில் கையில் ஒரு செல்போன் இருந்தால் போதும் ஒட்டுமொத்த உலக நிகழ்வுகளையும் அப்டேட்டில் வைத்திருக்கும் அளவிற்கு இன்றைய தொழில்நுட்பம் முன்னேறி உள்ளது.

எல்லோரிடமும் செல்போன் வந்துவிட்டது என்ற காலம் மாறி ஒரு தனி மனிதரிடம் எத்தனை செல்போன்கள் உள்ளன, அதில் எத்தனை சிம்கார்டுகள் உள்ளன என்ற நிலையே உள்ளது. இந்த சூழலில் தொலைதொடர்பு நிறுவனங்களும்(Telecom Operators) தங்கள் பங்கிற்கு வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு கூடுதல் சலுகைகளை வழங்கி வருகின்றனர்.

ஏர்டெல் ரூ.399 போஸ்ட்பெய்டு பிளான்:

ஏர்டெல் நிறுவனம் இந்த 399 ருபாய் திட்டத்தின் கீழ் ஒரு மாதத்திற்கு அன்லிமிடட் கால் வசதி, 40 ஜிபி(GB) மொபைல் டேட்டா சேவையை வழங்குகிறது. அந்த ஒரு மாதத்திற்குள் மொபைல் டேட்டாவை பயன்படுத்தவில்லை என்றாலும் அடுத்த மாதத்திற்கும் அது பயன்படுத்தப்படாத டேட்டாவாக (Unused data) தொடர்கிறது.

மேலும் அமேசான் பிரைம் வீடியோவுக்கான ஒரு வருட சப்ஸ்கிரப்ஷனும் (Subscription) இலவசமாக கொடுக்கப்படுகிறது. இது ஏர்டெல் டிவியிலும் இந்த சலுகை பொருந்தும். இதே போல ஏர்டெல் 499 ரூபாய் திட்டத்திலும் அன்லைமிடட் கால் வசதி, 75 ஜிபி மொபைல் டேட்டாவும், நெட்ஃபிளிக்ஸ் மூன்று மாதத்திற்கான வீடியோ சப்ஸ்கிரப்ஷனும் வழங்கப்படுகிறது. 

வோடோபோன் ரூ.399 போஸ்ட்பெய்டு பிளான்:

Related image

வோடோபோன் நிறுவனம் இந்த திட்டத்தின் கீழ் ஒரு மாதத்திற்கான அன்லிமிடெட் கால் வசதி, 40 ஜிபி மொபைல் டேட்டா சுழற்சி முறையில் வழங்கப்படுகிறது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் 200 ஜிபி டேட்டா வரை பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. இதேபோல மாதம் ரூ.499 செலுத்தி அன்லிமிடட் கால் , 75 ஜிபி டேட்டா ஆகியவற்றை பெறலாம். மேலும் வாடிக்கையாளர்கள் வோடோபோன் பிளே (vodofone play) , ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் வீடியோ  ஆகியவற்றை இலவசமாக சப்ஸ்கிரைப் செய்து கொள்ள முடியும். 

ஜியோவின் ரூ.199 போஸ்ட்பெய்டு பிளான் :

Image result for jio postpaid

ரிலையனஸ் ஜியோ நிறுவனம் மாதம் 199 ரூபாய் செலுத்துவதன் மூலம், அன்லிமிடெட் கால், 25 ஜிபி டேட்டா சேவையை ஒரு மாதததிற்கு வழங்குகிறது. 25ஜிபி டேட்டாவை பயன்படுத்திவிட்டால், அதன் பிறகு ஒரு டேட்டாவிற்கு ரூ.20 செலுத்தவேண்டும். மேலும் இலவச ஜியோ ஆப்(App) சப்ஸ்கிரப்ஷனும், தினமும் 100 எஸ்.எம்.எஸ்(SMS) இலவசமாக வழங்கப்படுகிறது.

 

News Counter: 
100
Loading...

aravind