முகத்தில் எண்ணெய் பிசுபிசுப்பை கட்டுப்படுத்த சிறந்த வழிகள்..!!

share on:
Classic

பொதுவாக எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு கோடைக்காலத்தில் இன்னும் அதிகரித்து சருமத்தின் அழகை கெடுத்துவிடுகின்றன.

கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சருமம் வறண்டு காணப்படும். ஆனால் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு கோடை காலத்தில் பசை தன்மை இன்னும் அதிகரித்து காணப்படும். இந்த பசை தன்மையை போக்க சில இயற்கை முறையை பயன்படுத்தி தவிர்க்கலாம்.

வெயிலில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததும், சிறிது தயிர் கடலைமாவு, எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிதுநேரம் கழித்து கழுவினால் அதிகப்படியாக எண்ணெய் வழிவது குறைந்து முகம் பளபளக்கும். வெள்ளரிக்காயை தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வந்தால் முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதை தவிர்க்கலாம்.

எண்ணெய் பசை சருமத்தினர் அடிக்கடி முகம் கழுவ வேண்டும். முகத்தை அலம்ப சோப்பிற்கு பதில் கடலைமாவை பயன்படுத்தலாம். இதனால் எண்ணெய் வழிவது குறைவதோடு, முகமும் பளபளப்பாக காட்சியளிக்கும். மோரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் எண்ணெய் வழிவது குறையும். 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan