நாக்கில் உள்ள கரும்புள்ளியை போக்க சிறந்த வழிகள்..!!

share on:
Classic

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்வார்கள். அது போல நமது உடலின் ஆரோக்கியத்தை நமது நாக்கின் மூலம் அறிந்து கொள்ள முடியும். 

உடலில் சத்து குறைவினால் நாக்கில் கரும்புள்ளிகள் ஏற்படுகிறது. ஒரு சில நேரங்களில் சாப்பிட முடியாத நிலை கூட ஏற்படுகிறது.  தற்போது இதனை போக்க சில வழிமுறைகளை பார்ப்போம்

கரும்புள்ளிகளை போக்க சில எளிய வழிகள் :

  • வேப்பிலையை சிறிது தண்ணீரில் போட்டு கொதிக்கவைக்கவும். பின் அதில் நன்றாக வாய் கொப்பளிக்கவும். இப்படி வாரத்துக்கு இருமுறை செய்ய, கரும்புள்ளிகள் குறைய துவங்கும். 
  • அன்னாச்சிப்பழம் சாப்பிட படிப்படியாக நாக்கில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.
  • அலோ வேரா வெட்டுக்காயத்தின் வடுவை குணப்படுத்த உதவும். கரும்புள்ளிகளை அகற்ற அலோ வேரா ஜெல்லை அப்பகுதியில் தொடர்ந்து தடவவும், அல்லது அலோ வேரா ஜூஸ் குடித்தாலும் நல்ல பலன் கிடைக்கும். 
  • இரண்டு இலவங்கப்பட்டையுடன் கொஞ்சம் கிராம்பு தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். சூடு குறைந்தவுடன், அதில் நாளுக்கு இரு முறை கொப்பளிக்க, கருப்பு புள்ளிகள் குறையத்துவங்கும். 
  • பூண்டை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் நாளுக்கு 1 நிமிடம் என ஒரு மாதம் தேய்க்க, கரும்புள்ளிகள் குறையும். 
News Counter: 
100
Loading...

Thaamarai Kannan