காலத்தை வென்ற சிரிப்புக் கலைஞன் சார்லி சாப்ளின் பிறந்த தினம் இன்று..!

share on:
Classic

எப்படிப்பட்டவர்களையும் சிரிக்க வைத்து விடும் சாப்ளினின் நடிப்பு. காலம் கடந்து இப்போதும் உலகம் முழுவதும் ரசிகர்களை தன் நகைச்சுவையால் கட்டிப்போட்ட சார்லி சாப்ளினின் பிறந்த தினம் இன்று...

இனிமையில்லா குழந்தைப்பருவம்:
1889ஆம் ஆண்டு இதே நாளில் தான், லண்டனில் பிறந்தார், சார்லி சாப்ளின். எப்போதும் நினைத்து மகிழும்படி, அவரது குழந்தைப்பருவம் அவ்வளவு இனிமையானதாக இருக்கவில்லை. அவருக்கு 4 வயது இருக்கும்போதே பிறந்த சில தினங்களிலேயே இசைக்கலைஞர்களான அவரது பெற்றோர் சார்லஸ் ஹன்னாவும், ஹாரியட் ஹில்லும் கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிந்தனர்.

 

சிறு வயது குறும்புத்தனம்:
வாடகை தர முடியாத காரணத்தால் அவரது தாய் ஹன்னா, சகோதரர் சிட்னி, சாப்ளின் மூவரும் குடியிருந்த வீடுகளிலிருந்து அடிக்கடி துரத்தப்பட்டனர். இதனால் சாப்ளினும் தன் அம்மாவோடு சேர்ந்து சில நாடகங்களில் நடித்தார். அப்போது சிறு பையனாக சாப்ளினின் குறும்புத்தனமான நகைச்சுவை நடிப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 

 

சாப்ளினின் பன்முகத் திறமை:
சிறிய மீசை, கிழிந்த கோட்டு, தலைக்குப் பொருந்தாத தொப்பி, வித்தியாசமான நடை, வலிகளை மறைக்கும், மறக்க வைக்கும் புன்னகை என தனக்கென ஒரு அடையாளத்தை அவர் உருவாக்கிக் கொண்டார். நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி கதாசிரியர், இயக்குநர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமையாளராக திகழ்ந்தார் சாப்ளின்.
 

சாப்ளினின் தத்துவம்:
'மழையில் நனைந்துகொண்டுச் செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும். காரணம் அப்போதுதான் நான் அழுவது மற்றவர்களுக்குத் தெரியாது’ என்ற இந்த வரிகளே சாப்ளினின் வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருந்தது என்பதற்கு சான்று.

 

சாப்ளினின் புகழ்பெற்ற திரைப்படங்கள்:
சாப்ளினின், டிரேம்ப் (TRAMP), தி கிட் (The kid), கோல்ட் ரஷ் (Gold Rush), சர்க்கஸ் (Circus), சிட்டி லைட்ஸ் (City lights), மாடர்ன் டைம்ஸ் (Modern Times), தி கிரேட் டிக்டேட்டர் (The great Dictator) ஆகிய படங்கள் இன்றளவும் திரை உலக இதிகாசங்களாகப் புகழ் பெற்று விளங்குகின்றன.

 

ஆஸ்கார் விருது:

1972-ல் சாப்ளினுக்கு சிறப்பு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. நமது இந்திய அரசாங்கம் அவரது தபால் தலையை வெளியிட்டு ஒரு கலைஞனுக்கு செய்ய வேண்டிய மரியாதையைச் செய்தது. 

 

நமக்குச் சொல்லும் பாடம்:

‘உன் மனம் வலிக்கும் போது சிரி, பிறர் மனம் வலிக்கும்போது சிரிக்க வை’ இது தான் சாப்ளினின் வாழ்க்கை நமக்குச் சொல்லும் பாடம்.

 

 

News Counter: 
100
Loading...

aravind