நாட்டிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : அருண் ஜேட்லி மறைவு குறித்து தலைவர்கள் இரங்கல்..

share on:
Classic

அருண் ஜேட்லியின் மறைவு நாட்டிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு என்று அரசியல் தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர். 

மூத்த பாஜக தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான அருண் ஜேட்லி இன்று மதியம் 12 மணியளவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் “ நாட்டிற்கு பல்வேறு சேவைகளை அருண் ஜேட்லி, நாட்டிற்கும், கட்சிக்கும் கிடைத்த மிகப்பெரிய சொத்து. பொருளாதாரத்தை இருளில் இருந்து வெளியே கொண்டு வந்து, சரியான வழியில் கொண்டு சென்ற பெருமை அருண் ஜேட்லிக்கு எப்போதும் உண்டு. அவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி வெளியிட்டுள்ள பதிவில் “ சிறந்த பேச்சாளரும், சட்ட வல்லுனருமான் ஜேட்லி நாட்டிற்கும் கட்சிக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியவர். அவருக்கு என் அஞ்சலி, அன்புக்குரியவர்களுக்கு இரங்கல், ஓம் சாந்தி” என்று குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பக்கத்தில் “ முன்னாள் நிதியமைச்சரும், மூத்த தலைவருமான அருண் ஜேட்லியின் மரணம் நாட்டிற்கு ஏற்பட்ட பேரிழப்பு. சட்ட நிபுணரும், மூத்த தலைவருமான ஜேட்லி தனது ஆளுமை திறன்களுக்காக மிகவும் அறியப்பட்டவர். இந்த நேரத்தில் அவரின் குடும்பத்தினருக்காக பிராத்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது டிவிட்டர் பக்கத்தில் “ அருண் ஜேட்லியின் மறைவு மிகுந்த வருத்தத்தை தருகிறது. ஒரு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினரும், சிறந்த வழக்கறிஞருமான அனைத்து கட்சிகளின் பாராட்டையும் பெற்றவர். இந்திய அரசியலின் அவரின் பங்களிப்பு நினைவுக் கூறத்தக்கது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

News Counter: 
100
Loading...

Ramya