தொடரும் பிக்பாஸ் சர்ச்சைகள் : மன்னிப்பு கேட்ட சரவணன்..

share on:
Classic

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து நடிகர் சரவணன் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார் சரவணன்.

2006 முதல் இந்தியாவில் காலடி எடுத்து வைத்த பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு முதல் தமிழில் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்தியில் 10 சீசன்களுக்கு மேல் கடந்து விட்ட இந்நிகழ்ச்சி, தற்போது தமிழில் 3வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கும் நிலையில், முதல் சீசனில் தொடங்கிய சர்ச்சைகள் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. முதல் சீசனில் தமிழ்தாய் வாழ்த்தை எழுதியவர் தாயுமானவர் என்று ஜூலி சொல்லியது தமிழகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே சீசனில் காய்த்ரி ரகுராம் “ சேரி பிகேவியர்” என்று கூறியதும் பேசு பொருளானது. 

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் பண மோசடி புகாரில் சிக்கிய மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றதிலிருந்தே சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. இதேபோல் மற்றொரு போட்டியாளரான வனிதா விஜயகுமாரின் மீது குழந்தை கடத்தல் புகார் அளிக்கப்பட்டதால் அவரை விசாரிக்க போலீசார் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றனர். இந்நிலையில் கடந்த வாரம் சனிக்கிழமை ஒளிபரப்பான நிகழ்ச்சியில் மீராமிதுன் சேரன் மீது குற்றச்சாட்டை கையில் எடுத்த கமல்ஹாசன் அது குறித்த உரையாடினார். சேரனிடம் உள்ள நியாயத்தை எடுத்துரைக்கும் விதமாக, கூட்ட நெரிசலான பேருந்தில் பெண்கள் செல்வதை உதாரணமாக சொன்னார். ஆனால் பெண்களை உரச வேண்டும் என்ற எண்ணத்தில் பேருந்தில் வருபவர்களும் உண்டு என்றும் தெரிவித்தார். 

கமலின் இந்த கருத்தை ஆமோதிப்பது போல் கையை உயர்த்தி தலையாட்டினார் சரவணன். உடனே சரவணனும் அதனை கண்டித்திருப்பார் போல என்று கமல் கூறினார். தொடர்ந்து பேசிய சரவணன் தான் கல்லூரியில் படித்த போது பேருந்தில் பெண்களை உரசியிருப்பதாக தெரிவித்தார். அப்போது அவர் அதையும் தாண்டி புனிதமாகிவிட்டார் என்று கமல்ஹாசன் தெரிவித்தார். சரவணன் அந்த கெட்ட எண்ணங்களை எல்லாம் கடந்து, தற்போது நல்வராகி விட்டார் என்பதே அதன் பொருள். அதற்கு அரங்கில் இருந்த பார்வையாளர்கள் கைதட்டி வரவேற்றனர். இதுதொடர்பான வீடியோவை டிவிட்டரில் பதிவிட்ட சின்மயி சரவணின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார். இதேபோல் பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வந்தனர். 

இந்நிலையில் நேற்று ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் சரவணன் தான் பேசியது குறித்து மன்னிப்பு கேட்டார். சரவணனை கன்பெஷன் ரூமிற்கு அழைத்த பிக்பாஸ் பெண்கள் குறித்து இழிவாக பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்கும் படி கூறினார். இதனையடுத்து தான் கல்லூரி காலங்களில் செய்த தவறுகளை யாரும் செய்ய வேண்டாம் என்று சொல்ல தான் பேசினேன். ஆனால் என்னால் அதனை முழுமையாக சொல்ல முடியவில்லை. நான் பேசியது யாருக்காவது மனவருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள். யாரும் நான் செய்த தவறை செய்யாதீர்கள், செய்தால் தண்டனை உண்டு என்று தான் சொல்ல வந்தேன்” என்று தெரிவித்தார். 

 

News Counter: 
100
Loading...

Ramya