இவர்கள் தான் பிக்பாஸ் போட்டியாளர்கள்

share on:
Classic

மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மொத்தம் 15 போட்டியாளர்களோடு மிக்பாஸ்-3 தொடங்கியுள்ளது. செய்தி வாசிப்பாளர், நடிகை, நடிகர், மாடல் என பல்வேறு வித்தியாசமான துறைகள் மற்றும் குணாதிசயத்துடன் இருக்கும் நபர்கள் போட்டியாளராக பங்கேற்கின்றனர். இதில் குறிப்பிடதக்க அளவில் இலங்கையை சேர்ந்த இரண்டு பேரும், மலேசியாவை சேர்ந்த ஒருவர் என முன்பு இருந்த இரண்டு சீசன்களை விட மிகவும் கவனிக்கதக்க அளவில் போட்டியாளர்களின் தேர்வு இருந்துள்ளது என அனைவரும் பாராட்டி வருகின்றனர். 

பாத்திமா பாபு:

அந்த வகையில் முதல் போட்டியாளராக உள்ளே நாம் ஏற்கனவே கணித்தபடி நடிகையும் செய்தி வாசிப்பாளருமான பாத்திமா பாபு சென்றுள்ளார். பாத்திமா பாபு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக தன் வாழ்க்கையை தொடங்கியவர். பின்னர் பால்சந்தர் மூலம் கல்கி படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து பல திரைப்படங்கள் நடித்த இவர் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். 

லொஸ்லியா: 

இலங்கையைச் சேர்ந்தவர் செய்தி வாசிப்பாளராக இருக்ககும் இவரின் குடும்பம் இலங்கையின் போர்ச் சூழல்களில் சிக்கித் தவித்த குடும்பம். ஏழ்மை காரணமாக இவரது தந்தை வெளிநாட்டுக்கு சென்று சம்பாதித்து குடுமபத்தை காப்பாற்ரியவர். கொஞ்சும் இலங்கைத்தமிழ் பேசும் இவரின் உச்சரிப்பு அனைவராலும் கண்டிப்பாக ரசிக்கக்கூடி வகையில் இருக்கும். மேலும் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் தமிழ் நாட்டு தொலைல்லாட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடதக்கது.

சாக்‌ஷி அகர்வால்:

பிக்பாஸ் வீட்டுக்குள் மூன்றாவது போட்டியாளர் நுழைந்தவர் சாக்‌ஷி அகர்வால், சென்னையை சேர்ந்த இவர் பெங்களுரில் மாடலாக பணியாற்றி பின்னர் சினிமாவுக்குள் நுழைந்தார். கன்னடம், மலையாளம்,தமிழ் என மூன்று மொழிகளிலும் கலக்கி வந்த இவர் ரஜினியின் காலா திரைப்படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்து புகழ் பெற்றார். தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக அறிமுகாமாகியுள்ளார்.

மதுமிதா: 

தமிழ் சினிமா காமெடி நடிகையாக வலம் வரும் மதுமிதா நான்காவது பிகபாஸ் போட்டியாளராக களமிறங்கியுள்ளார். தான்  அறிமுகமான முதல் படமான ஒரு கல் ஒரு காண்ணாடி படத்தில் நகைச்சுவையால் அனைவரையும் கவர்ந்தவர். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை தொடர்ந்து பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்தார். குறிப்பாக இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமார படத்தில் இவர் நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது. தமிழ் சினிமாவில் திறமையான காமெடி நடிகைகள் இல்லை என்ற குறையை தீர்க்க வந்தவர் என கூறப்பட்டு வரும் இவர் தற்போது பிக்பாஸில் களமிறங்கியுள்ளார். 

கவின்:

நாடகங்களில் ஹிரோவாக நடித்து புகழ் பெற்றவர் கவின். குறிப்பாக சரவணன் மீனாட்சி தொடரில் இவரின் எதார்த்த நடிப்பு கிராமங்களிலும் இவருக்கான ரசிகர்களை உருவாக்கியது. பெண் ரசிகைகள் அதிகம் கொண்ட இவர் தமிழ் சினிமாவில் “நட்புண்ணா என்னன்னு தெரியுமா” படம் மூலம் ஹிரோவாக அறிமுகமானார். இப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. பிறந்த நாளான நேற்று முதல் ஆண் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.

அபிராமி வெங்கடாச்சலம்:

அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ள அபிராமி ஒரு மாடலாக தனது மீடியா வாழ்க்கையை தொடங்கியவர். களவு திரைப்படம் தான் இவரின் முதல் தமிழ் திரைப்படம். குறுகிய காலத்தில் நல்ல திரைப்படங்களில் வாய்ப்பு பெற்ற அவர் தற்போது 6வது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழந்துள்ளார்.

சரவணன்:

80-ல் கதாநாயகனாக வளம் வந்து பல வெற்றி படங்களை கொடுத்தவர் சரவணன். பின்னர் சில காரணங்களிக்காக சினிமாவை விட்டு விளகி இருந்த இவர், மீண்டும் பாலா இயக்கிய நந்தா திரைப்படத்தில் வில்லனாக ஒரு சிறு வேடத்தில் கம் பேக் கொடுத்தார். பின்னர் அமீர் இயக்கிய பருத்திவீரன் படத்தில் கார்த்திக்கு மாமாவாக நடித்ததன் மூலம் பட்டிதொட்டிங்கும் பிரபலமானார். பருத்திவீரன் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சினிமாவில் பிஸியாகி பல படங்களில் நடித்த இவர்தான் 7வது போட்டியாளராக வீட்டுக்குள் சென்றுள்ளார்.

வனிதா விஜயகுமார்:

மாணிக்கம் படத்தில் ராஜ்கிரன் ஜோடியாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். நடிப்பு வாய்ப்பு சரியாக அமையாததால் கல்யாணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் நுழைந்தவர் . கல்யாண வாழ்வு மற்றும் விஜயகுமாருடன் சொத்துப் பிரச்சனைகளில் பெரும் பிர்ச்சனைகளிலும் சர்ச்சைகளிலும் சிக்கியவர். விஜயகுமார் கமலுக்கு நெருங்கிய நண்பர் என்ற வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் மிக முக்கிய போட்டியாளராக பார்க்கப்படுகிறார்.

சேரன்:


 
பாரதிக் கண்ணம்மா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிக்பாஸின் மற்றொரு போட்டியாளராக களமிறங்கியுள் சேரன், இயக்குநர் கே எஸ் ரவிக்குமாரின் உதவி இயக்குநராக பணீயாற்றிய இவர் ஆட்டோகிராப் படம் மூலம் நடிகராக மாறினார். பல தேசிய விருது பெற்ற படங்களை இயக்கிய இவர் நல்ல தரமான படங்கள் மட்டுமல்லாது அதை மக்கள் ரசிக்கும்படியும் எடுத்தவர். திருட்டு விசிடி-க்கு எதிராக ஒரு அமைப்பை ஆரம்பித்தார் அதில் ஏற்பட்ட வீழ்ச்சி அவரை பட இயக்கத்திலிருந்து தள்ளி வைத்தது . சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்தில் விஷாலுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்ட இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்துள்ளார்.

ஷெரீன்: 

தனது 16 வயதில் மாடலான இவர் அதே வருடத்தில் துருவா எனும் கன்னட படத்தில் அறிமுகமானார். மேலும் தமிழில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தனுஷ், செல்வராகவனுக்கு திருப்புமுனையாக அமைந்த துள்ளுவதோ இளமை திரைப்படம் ஷெரினுக்கும் மிக முக்கியமான படமாக அமைந்தது. தமிழ் ,கன்னடம் , மலையாளம் என பல மொழிகளிலும் எண்ணற்ற படங்களில் ஹிரோயினாக நடித்துள்ளார். படங்களில் வாய்ப்பு குறைந்த பின் நடிப்பிற்கு  முழுக்கு போட்டு விட்டு DJ அவதாரம் எடுத்தார். 

மோகன் வைத்தியா:

கரனாடக பாடகர், இசைக் கலைஞர், வீணைக்கலைஞர் என பன்முகத்தன்மை கொண்டவர் தான் மோகன் வைத்தியா. நாடக மேடைகளில் நடிக்க கூடிய இவர் டீவித் தொடர்களிலும் சினிவிலும் நடித்திருக்கிறார். புகழ்பெற்ற பாடகர் ராஜேஷ் வைத்தியாவின் சகோதரரான இவர் தொலைக்காட்சி தொடர்களில் காமெடி செய்து புகழ் பெற்றவர். 60 வயதில் திறமை மிகுந்த ஒருவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறிப்பிடதக்கது.

தர்ஷன் தியாகராஜா:

தமிழக மக்களுக்கு அறிமுகமில்லாத புதிய முகம் தான் தர்ஷன் தியாகராஜா . சாஃப்ட் வேர் துறையில் இருந்த இவர் மீடியா மீது கொண்ட ஆர்வம் காரணமாக மாடலிங்கில் நுழைந்து, பல துன்பங்களுக்கு பிறகு முன்னணிக்கு வந்தவர். கலந்து கொள்ளும் போட்டியாளர்களில் அதிகம் பிரபளமற்ற போட்டியாளர் இவர்தான். ஏழ்மையான குடுமபத்திலிருந்து வந்து சினிமா ஆசையில் ஹிரோவாக ஆசைப்பட்டவர். தற்போது பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்து உள்ளே நுழைந்திருக்கிறார். 

சாண்டி:

 டீவி நடனப்போட்டிகளில் நடன இயக்குநராக பணியாற்றி புகழ் பெற்றவர் தான் சாண்டி. பிக் பாஸில் ஏற்கனவே கலந்து கொண்ட காஜலுடன் திருமணமாகி விவாகரத்து பெற்றவர். நடன இயக்குநராக சினிமாவில் அறிமுகமாகி ரஜினிக்கு காலா படத்தில் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியை கலாய்த்து ஷோக்களில் காமெடி செய்த இவரே தற்போது இந்த பிக் பாஸில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். 

முகேன் ராவ்:

மலேஷியாவில் பிறந்து வளர்ந்த முகேன் ராவ் சுதந்திரப்பாடகராக பல ஆல்பங்களில் பாடியுள்ளார். யூடுயூப் வீடியோக்கள் இவரை புகழின் உச்சிக்கே அழைத்து சென்றது. தொடர்ந்து பாடலகள் எழுதி பாடி ஆலபங்கள் வெளியிட்டார். சிறிய ஏழ்மை குடும்பத்தில் பிறந்து ஒரு நல்ல இடத்தை தன் திறமையால் பெற்றவர். வெளிநாட்டில் இருந்து தமிழ் கேம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இரண்டாவது நபர். தற்போது பிக்பாஸ் மூலம் தழிலில் அடியெடுத்து வைக்கிறார். 

ரேஷ்மா:

ஒரு மாடலாக தனது வாழ்க்கையை தொடங்கிய ரேஷ்மா பின்னர் டீவி சீரியல்கள் மூலமாக புகழ் பெற்றவர். மேலும் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். குறிப்பாக வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் இவர் நடித்த புஷ்பா கதாப்பாத்திரம் மிகப்பெரிய அளவில் இவரை பிரப்லப்படுத்தியது. காமெடி நடிகர் யோகிபாபுவுடன் இவருக்கு காதலென்று சொல்லப்பட்ட போது அதை மறுத்தவர். பல கிசு கிசுக்களுக்கு மத்தியில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார். 
 

News Counter: 
100
Loading...

Padhmanaban