பிக்பாஸ் வீட்டில் ஆரம்பம் ஆகும் போர் - வெடிக்கும் அபி...!

share on:
Classic

மீரா மிதுனை கொஞ்சமும் பிடிக்கவில்லை- அபிராமி

பிக்பாஸ் வீட்டிற்குள் 15 போட்டியாளர்கள் உள்ள நிலையில் 16வதாக போட்டியாளராக மீரா மிதுன் நுழைந்தார். அபோது பிக்பாஸ் ஹவுஸ் மெட்ஸ் ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டமாக இருந்தனர். ஆனால் சாக்‌ஷி அகர்வால் மற்றும் அபிராமி ஆகியோர் அவரை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து தனியாக சென்று பேசிக்கொண்டனர். அப்போது அபிராமி தனக்கு மீரா மிதுனை கொஞ்சமும் பிடிக்கவில்லை என பகிரங்கமாகவே கூறினார்.

மீரா மிதுன் போலியாக நடிக்கிறார் என அவர் குறித்து அபிராமியும் சாக்‌ஷியும் மற்ற போட்டியாளர்களிடம் கூறினர் . இதைத்தொடர்ந்து ஷெரின், சாக்‌ஷி, அபிராமி ஆகியோர் கூட்டாக சேர்ந்து மீரா குறித்து தரக்குறைவாக பேசித்தொடங்கினர்.மொத்தத்தில் மீரா பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தது சாக்ஷிக்கும் அபிராமிக்கும் பிடிக்கவில்லை என்பது முதல் நாளிலேயே தெளிவாக தெரிந்துவிட்டது, எனவே இனிவரும் நாட்களில் மிகப்பெரும் போர் நடக்கப்போவது உறுதி.
 

News Counter: 
100
Loading...

Padhmanaban