பிக்பாஸ் வீட்டின் 16வது போட்டியாளர் இவரா....?

share on:
Classic

16வது போட்டியாளராக பிரபள மாடல் அழகி மீராமிதுன் 

மிகவும் சுவாரஸ்யமாக துவங்கியுள்ள பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் மேலும் ஒரு திருப்பமாக 16வது போட்டியாளர் நுழைந்திருக்கிறார். இம்முறை 17 போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என ஏற்கனவே கமல் கூறியிருந்த நிலையில் 15 போட்டியாளர்கள் தான் இதுவரை வீட்டில் இருந்தார்கள். மேலும் இரண்டு போட்டியாளர்கள் எந்த நேரமும் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுமதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் 16வது போட்டியாளராக பிரபள மாடல் அழகி மீராமிதுன் வீட்டுக்குள் வந்திருக்கிறார்.

சென்னையை சேர்ந்த மீராமிதுன் படிப்பிற்கு பின் மாடலிங் உலகில் நுழைந்து மிஸ் சவுத் இந்தியா 2016, மிஸ் தமிழ்நாடு 2016 பட்டங்களை வென்றவர். மேலும் எட்டு தோட்டாக்கள், சூர்யா நடிப்பில் வெளிவந்த தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் இவர், தமிழக பெண்களுக்கென்றே மிஸ் திவா தமிழ்நாடு அழகிப்போட்டியை நடத்த முற்பட்டு பல பிரச்சனைகளில் சிக்கி செய்திகளில் பரபரப்பாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

Padhmanaban