சண்டை, சலசலப்பு, சமாதானம்......

share on:
Classic

மிகவும் பரபரப்பாக சென்றுக்கொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற சுவாரஸ்யமான நிகழ்வுகளை பார்ப்போம்:

1. வழக்கம் போல காலையில் பாடல் ஒலிபரப்பாக போட்டியாளர்கள் உற்சாகமாக நடனமாடி எழுந்தனர். இதையடுத்து கடிதம் ஒன்று அனுப்பப்படுகிறது, அதில் மோகன் வைத்யா வீட்டில் உள்ள அனைவருக்கும் குத்து டான்ஸ் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று பிக் பாஸ் உத்தரவிட, அனைத்து போட்டியாளர்களுக்கும் மோகன் வைத்யா நடனம் கற்றுக் கொடுக்கிறார். 

 

2. இதையடுத்து மதுமிதா தனது கணவருக்கு கேமரா முன்பு நின்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கிறார். திருமணம் ஆகி முதல் பிறந்த நாள், அனைவரையும் தான் மிஸ் பன்னுவதாக கூறி, எல்லாம் கைக்கூடட்டும் என தெரிவித்து செல்கிறார்.

 

3. தொப்டர்ந்து சமையலறையில் கீரை டப்பாவை வைத்த்கது யார் என்று அபிராமி வீட்டில் உள்ளவர்களிடம் கோபப்படுகிறார். அப்போது மீராவிற்கும், அபிராமிக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் தலைவர் வனிதா மீராவை விசாரிக்கிறார். சண்டை அப்படியே நீண்டு செல்ல, மீரா அழுகிறார். பர்சனலாக எதையும் சொல்லவில்லை என்று கூறி அபிராமியும் அழுகிறார். இப்படியே போக தலைவர் வனிதாவும் கோபமடைய சண்டை சூடுபிடிக்கிறது. கடைசி வரை தான் வீண் சண்டைக்கு போகவில்லை என மீரா முரண்டு பிடிக்கிறார். 

 

4. தொடர்ந்து, சொகுசு பட்ஜெட்டிற்கான அறிவிப்பு வருகிறது. அதில், அனைவரும் ஒன்றாக அமர்ந்து தங்கள் வாழ்க்கையில் நடந்தவையை பகிர்ந்துக்கொள்ள வேண்டும், இதற்காக வைக்கப்பட்டிருந்த சீட்டை எடுக்க, முதலில் மோகன் வைத்யா அழைக்கப்படுகிறார். அவர் தனக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து பேச வேண்டும் என்று சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு தனது காது கேட்காத, வாய் பேச முடியாத மனைவியின் இறப்பு குறித்து பேசுகிறார். 

 

5. அவரை தொடர்ந்து ரேஷ்மாவிற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. தன்னுடைய இரண்டு கணவன்மார்களால் வாழ்க்கை எந்தளவிற்கு பாதிக்கப்பட்டது என்பதை கண்ணீர் மல்க தெரிவிக்க அனைத்து போட்டியாளர்களும் அழுகின்றனர். அன்பைவரும் அவருக்கு சமாதனம் சொல்கின்றனர்

 

6. கண்ணீரில் இருந்து மீண்டு வர அடுத்ததாக அபிராமி அழைக்கப்பட்டு, மறக்க முடியாத விஷயம் குறித்து பேசு பணிக்கப்படுகிறார். அப்போது அவர் “நேர்கொண்ட பார்வை” படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு குறித்து மகிழ்ச்சியுடன் கூறுகிறார். அவரைத் தொடர்ந்து நேர்றைய நாளின் கடைசி போட்டியாளராக ஷெரின் தான் யாருக்கும் தெரியாமல் செய்த விஷயம் குறித்து பேசி முடிக்கிறார். 

 

கோபம், சமாதானம், கண்ணீர் என நேற்றைய நிகழ்ச்சி முடிய, அமிராமிக்கும் மீராவுக்கும் இடையிலான போர் நீண்டுக்கொண்டே செல்லுமா அல்லது முடிவுக்கு வருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
 

News Counter: 
100
Loading...

Padhmanaban