ஒரு டப்பாவுக்காக இந்த சண்டையா......? மீரா Vs அபி

share on:
Classic

மீராவுக்கும் அபிராமிக்கும் மூண்ட சண்டை

பிக் பாஸ் சீசன்3-ன் மூன்றாவது நாள் மிகவும் பரபரப்பாக முடிந்துள்ளது. காலையில் சுத்தம் செய்யும் அணியைச் சேர்ந்த அபிராமி, கீரை டப்பாவை திறந்த வைத்தது யாரு என சத்தம் போட, கோபப்படாதீர்கள் என்று மீரா தெரிவிக்கிறார். அதற்கு அபிராமி உன்னிடம் நான் பேசவில்லை என்று கோபமாக பேசிவிட்டு செல்கிறார். இதுகுறித்து வீட்டின் தலைவர் வனிதாவிடம், அபிராமி புகார் தெரிவிக்கிறார். அவர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் மீராவை விசாரிக்கிறார்.

சண்டை அப்படியே நீண்டு செல்ல, மீரா அழுகிறார். பர்சனலாக எதையும் சொல்லவில்லை என்று கூறி அபிராமியும் அழுகிறார். இப்படியே போக தலைவர் வனிதாவும் கோபமடைய சண்டை சூடுபிடிக்கிறது. பாத்திமா பாபு உள்ளே சென்று சண்டையை தீர்த்து வைக்க, அப்படியே புகைகிறது சண்டை. கடைசி வரை தான் வீண் சண்டைக்கு போகவில்லை என மீரா முரண்டு பிடிக்கிறார். 

News Counter: 
100
Loading...

Padhmanaban