மீராவை குறிவைக்கும் போட்டியாளர்கள்.... காரணம் என்ன தெரியுமா......?

share on:
Classic

மதுமிதா, வனிதாவிற்கு இடையே வெடிக்கும் சண்டை 

விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டில் வழக்கம் போல சிறு சிறு மோதல்கள், சண்டைகள் ஆரம்பமாகி வருகின்றன. அதை நிரூபிக்கும் விதமாக் தற்போது வந்துள்ள ப்ரோமோ வீடியோவில்

மதுமிதா, வனிதாவிற்கு இடையே சண்டை வெடிக்கிறது. மேலும் கவினிற்கும் மீராவிற்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. ரூல்ஸ் படித்த எனக்கு தெரியாதா? உனக்கு அறிவே கிடையாதா? என கவின் மீராவை பார்த்து கேட்க, முதலில் நீ பேசாதே என்று கூறுகிறார் மீரா

இதற்கிடையில், மோகன் வைத்தியா, தனது வயதிற்கு மரியாதை கொடு, மற்றவர்களிடம் பேசுவதுபோல் என்னிடம் பேசாதே என மீராவிடம் கோபத்தை காட்டுகிறார்.

ஒரு வாரம் அமைதியாக சென்றுக்கொண்டிருந்த வீட்டில் அவரவது முகங்கள் தற்போது தான் வெளி வர ஆரம்பித்துள்ளது என பிக்பாஸ் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த ப்ரோமோ தற்போது வைரலாகி வருகிறது.

News Counter: 
100
Loading...

Ramya