இவர் தான் இந்த வார தலைவர்

share on:
Classic

புதுமையான வகையில் தலைவர் மற்றும் அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன

மிகவும் விருவிருப்பாக நடந்துக்கொண்டிடுக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், நேற்று தலைவர் மற்றும் மற்ற அணிகளை தேர்ந்தெடுப்பதற்காக போட்டி வைக்கப்பட்டது. இம்முறை புதுமையான வகையில் தலைவர் மற்றும் அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அந்த வகையில் ஒவ்வொருவருக்கும் அட்டை வைக்கப்படுகிறது. அதனை எடுப்பவருக்கு அட்டையில் குறிப்பிட்ட வேலையை செய்ய வேண்டும். அதன்படி வனிதா விஜயகுமார் தலைவராக தேர்வு செய்யப்படுகிறார். 

பின்னர் கழிவறை சுத்தம் செய்யும் குழு, தங்கள் வேலையை பிரித்துக் கொள்கின்றனர். இதையடுத்து சாண்டிக்கு பட்ட காயம் குறித்து, லாஸ்லியா டிவியில் வருவது போன்று கேள்விகள் கேட்கிறார். அதற்கு கவின் பேட்டி எடுத்து பதிலைப் பெறுகிறார். நடந்த சம்பவம் குறித்து சாண்டி குழந்தை தனமாக பதில் கூறுகிறார். சாக்‌ஷி, வனிதா உறங்கிக் கொண்டிருக்க அவர்களை எழுப்ப துப்பாக்கியால் சுடும் சத்தம் ஒலிபரப்பப்படுகிறது. கடந்த பிக் பாஸ் சீசனில் நாய் குரைக்கும் சத்தம் ஒலிபரப்பானது குறிப்பிடத்தக்கது.
 

News Counter: 
100
Loading...

Padhmanaban