என்னது பிக்பாஸ் வீட்லயும் தண்ணீ இல்லயா...? கதறும் போட்டியாளர்கள்

share on:
Classic

தண்ணீர் மற்றும் எரிபொருளுக்கு மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது

பிக்பாஸ் சீசன்3 தொடங்கி நேற்று முதல் நாள் ஆரம்பம் ஆனது, பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக தமிழ் பிக்பாஸில் தண்ணீர் மற்றும் எரிபொருளுக்கு மீட்டர் பொருத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. சமையல் மற்றும் வீட்டு உபயோகத்திற்கு தினசரி 1000 லிட்டர் தண்ணீரும், கழிவறை பயன்பாட்டிற்கு ஒருவருக்கு தினசரி 100 லிட்டர் தண்ணீரும், சமையலுக்கு ஒரு வாரத்திற்கு 5 கிலோ எரிபொருளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதற்கு போட்டியாளர்கள் வரவேற்பு தெரிவிக்கின்றனர்.

ஆனால் இந்த அறிவிப்பை எதிர்த்து பேசிய பாத்திமா பாபு, மீட்டர் பொருத்தியது அவல நிலை என்று கூற, இந்த நடவடிக்கை எடுத்ததை வரவேற்று கைதட்டுவதாக சேரன் கூறுகிறார், அதை மற்ற போட்டியாளர்களும் ஏற்றுக்கொள்கின்றனர். தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் அதிகரித்து காணப்படுவதால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே கமல் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

News Counter: 
100
Loading...

Padhmanaban