இந்த வாரமே பிக்பாஸ் வீட்டுக்குள் போக போறேன்- பவர்ஸ்டார்

share on:
Classic

பிக்பாஸ் வீட்டுக்குள் 17வது போட்டியாளராக பவர்ஸ்டார்...! 

கடந்த ஜூன் 23ம் தேதி தொடங்கிய பிக் பாஸ்3 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள 16 போட்டியாளர்களில் இந்த வாரம் ஒருவர் வெளியேற்றப்படவிருக்கிறார். இந்நிலையில், ஏற்கனவே 17 போட்டியாளர்கள் இம்முறை பங்கேற்பார்கள் என நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது. ஒருவர் வெளியேறும் பட்சத்தில் மற்றொருவர் உள்ளே அனுப்ப படலாம் என அனைவரும் தெரிவித்து வருகின்றனர். இதனை உறுதிப்படுத்தும் விதமாக இந்த வாரமே பிக்பாஸ் வீட்டுக்குள் போக போறேன் என பவர்ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார். காவேரி Digital-க்கு பிரத்தியேக பேட்டியளித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 17வது போட்டியாளர் யார் என அனைவரும் எதிர்பார்த்துள்ள நிலையில் பவர்ஸ்டார் தான் உள்ளே செல்லப்போகிறார் என்ற தகவலை அவரே தெரிவித்துள்ள வீடியோவை கீழே பாருங்கள்

News Counter: 
100
Loading...

Padhmanaban