வீட்டில் இருந்து மதுமிதாவை வெளியேற்ற முடிவு- பிக்பாஸ் அதிரடி

share on:
Classic

மதுமிதாவின் பெயர் தான் பெரும்பான்மையாக ஒலிக்கிறது

பிக்பாஸில் இந்த வார இறுதியில் ஒருவர் கண்டிப்பாக வெளியேற்றப்படுவார். அது யார்? என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோ வீடியோவில் நீங்கள் நாமினேஷன் செய்த ஒருவரை வெளியேற்ற வேண்டும் என்று கூற, சாண்டியை மட்டும் அழைத்து இது ஒரு ப்ராங்க் என்று கூறுகிறார் பிக்பாஸ். இதனை அறியாத போட்டியாளர்கள் யாரை வெளியேற்றுவது என்பதில் தீவிரமாக உள்ளனர்.

அதில் மதுமிதாவின் பெயர் தான் பெரும்பான்மையாக ஒலிக்கிறது. ஆனால் மதுமிதா மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கோடு இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. வீட்டுக்குள் இருக்கும் இருவரைக்கொருவர் எவ்வாறு நினைத்து பழகுகிறார்கள் என்பதை அறிந்துக்கொள்ளவே இவ்வாறு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Padhmanaban