மூளை காய்ச்சல் நடவடிக்கை குறித்து பதில் அளிக்க நிதிஷ்குமார் மறுப்பு..!

share on:
Classic

பீகார் மாநிலம் முசாபர்பூரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128-ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அம்மாநில முதலமைச்சர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

பீகார் மாநிலம் முசாபர்பூர், கயா ஆகிய மாவட்டங்களில் குழந்தைகளிடையே மூளை காய்ச்சல் நோய் தாக்கம் அதிக அளவில் உள்ளது. ‘அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம்’ மற்றும் ‘ஜப்பான் என்சபிலிட்டிஸ்’ என 2 வகையான மூளைக்காய்ச்சல் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நோய் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்நிலையில், முசாபர்பூரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128-ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே, மூளை காய்ச்சல் நோயால் உயிரிழப்பு அதிகரித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் பதில் அளிக்க மறுத்துள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan