பீஹார் வெள்ளம் : உயிரிழந்தோரின் எண்ணிக்கை 78 ஆக உயர்வு..!

share on:
Classic

பீஹாரில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 78-ஆக உயர்ந்துள்ளது.

பீஹார், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டி வருகிறது. இடைவிடாது பெய்த மழையால் பல்வேறு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சாலை மற்றும் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பீஹாரில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 78 பேர் உயிரிழந்துள்ளனர். அசாமில் இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர். 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகளை துரிதப்படுத்த தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

News Counter: 
100
Loading...

Ragavan