முருகதாஸிடம் வாய்ப்பு கேட்கும் ஹாலிவுட் பிரபலம்...?

share on:
Classic

முருகதாஸிடம் அமெரிக்காவை சேர்ந்த நடிகர் கோரிக்கை

தர்பார் படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில், இப்படத்தின் இயக்குனர் முருகதாஸிடம் அமெரிக்காவை சேர்ந்த நடிகரும் தயாரிப்பாளருமான பில் ட்யூக் தன் ட்விட்டரில் ஒரு கோரிக்கை வைத்துள்ளார், அதில் “முருகதாஸ் அவர்களே எனக்கு தமிழ் பேச வராது . எனினும் ரஜினிகாந்தின் தொலைந்து போன அமெரிக்க உறவினர், நயன்தாராவின் மாமா போன்ற ரோல் செய்யலாம் .. என்னால் நடிக்க முடியும் என பலர் சொல்லியுள்ளனர். ஸ்ரீகர் பிரசாத் மற்றும் சந்தோஷ் சிவன் ஆகியோர் எனது காட்சிகளை எடிட் செய்யலாம். அனிருத் ஹிட் ட்யூன் ஒன்று போடலாம், அதில் உலகெங்கிலும் பிரபலமான ஸ்டார்ஸ் பலரை நடிக்கவைக்கலாமா, என்ன நினைக்கிறீர்கள் ?” என கேட்டு ட்வீட் செய்துள்ளார். இதற்கு இயக்குநர் முருகதாஸ் பதில் ட்வீட் செய்துள்ளார், அதில் அட நிஜமாகவே இது நீங்க தானா என்னால் நம்ப முடியவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் கூடிய விரைவில் நாம் ஒன்றாக இணைந்து பணியாற்றுவொம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

News Counter: 
100
Loading...

Padhmanaban