பாகிஸ்தானின் சுகாதார துறையில் முதலீடு செய்ய 'பில் கேட்ஸ்' ஆர்வம்...

share on:
Classic

பாகிஸ்தானின் ஐடி மற்றும் சுகாதார துறைகளில் முதலீடு செய்ய தயாராக இருப்பதாக, பாகிஸ்தான் பிரதமருக்கு 'பில் கேட்ஸ்' கடிதம் எழுதியுள்ளார்.

பில் கேட்ஸ் ஆர்வம் :

இதுகுறித்து பாகிஸ்தானின் PTI அமைப்பு தனது டுவிட்டர் தளத்தில் "பாகிஸ்தானின் IT மற்றும் சுகாதார துறைகளில் முதலீடு செய்ய பில் கேட்ஸின் 'மெலிண்டா கேட்ஸ் பௌவுன்டேஷன்' நிறுவனம் ஆர்வம் காட்டியுள்ளது " என்று கூறியுள்ளது. இதனை தொடர்ந்து பில் கேட்ஸ் எழுதிய கடிதத்ததுடன் அவரது 'மெலின்டா கேட்ஸ் பௌவுன்டேஷன் ' நிறுவனத்தின் தலைவர் டாக்டர் 'கிறிஸ்டோபர் இலியாஸ்', பாகிஸ்தான் பிரதமர் மற்றும் உலக சுகாதார நிறுவன(WHO) இயக்குனர் ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார். 

போலியோ ஒழிப்பு பணிகள் தீவிரம் :

அப்போது பேசிய பாகிஸ்தான் பிரதமர் 'இம்ரான் கான்', போலியோ ஒழிப்பை அவசர கால சுகாதார நடவடிக்கையாக எடுத்து அந்நாடு முழு வீச்சில் செயல்பட்டு கொண்டிருப்பதை பற்றி குறிப்பிட்டார். பில் கேட்ஸின் 'மெலின்டா கேட் பௌவுன்டேஷன்' தொடர்ந்து பல வளரும் நாடுகளில் வறுமையை ஒழிக்க பணியாற்றி கொண்டிருப்பது குறிப்பிடதக்கது.

உலக சுகாதார நிறுவன தலைவர் கூறும்போது :

தொடர்ந்து பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் " பாகிஸ்தானில் நாடு முழுவதும் போலியோவை ஒழிக்கும்  முயற்சியாக தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கப்பட்டு, முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது. பாகிஸ்தானில் போலியோ ஒழிப்பில் உலக சுகாதார நிறுவனம் பெரும் துணையாக இருக்கும்"என்று கூறியவர். பாகிஸ்தானில் உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்டிருக்கும் திட்டங்கள் பற்றியும் குறிப்பிட்டார்.

News Counter: 
100
Loading...

aravind