வழக்கத்தில் இல்லாத சட்டங்களை நீக்குவதற்கான சட்ட மசோதா தாக்கல்..!

share on:
Classic

 தமிழகத்தில் வழக்கத்தில் இல்லாத மற்றும்  மிகவும் பழமையான சட்டங்களை நீக்குவதற்கான சட்ட மசோதாவை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேரவையில் தாக்கல் செய்தார்.

மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், சில சட்டங்களின் பட்டியலை அனுப்பி, அதில் எந்தெந்த சட்டங்கள் தற்போது தமிழ்நாட்டில் பயன்பாட்டில் உள்ளது என்பதை கண்டறியுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், பழமையான மற்றும் வழக்கத்தில் இல்லாத சட்டங்களை நீக்க பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில், மிகவும் பழமையான 141 சட்டங்களை நீக்க தமிழக அரசு முடிவு செய்தது. 

அதற்கான சட்ட மசோதாவை சட்டத்துறை அமைச்சர் சண்முகம் தாக்கல் செய்தார். சட்டபேரவை கூடும் இறுதி நாளில் இந்த மசோதாவானது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind