தமிழகத்தில் உதயமாகிறது புதிதாக 2 மாநகராட்சிகள்

share on:
Classic

ஒசூர், நாகர்கோவில் ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவு தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது

தமிழகத்தில் ஏற்கெனவே 12 மாநகராட்சிகள் உள்ள நிலையில், ஒசூர் மற்றும் நாகர்கோவில் நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின் போது முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று தமிழக சட்டப்பேரவையில் ஒசூர், நாகர்கோவில் நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார். இந்த மசோதா நாளை நிறைவேற்றப்பட்ட உள்ளது. இதனால் இரு மாவட்டங்களின் வளர்ச்சியும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News Counter: 
100
Loading...

aravind