உலக பணக்காரர்கள் பட்டியலில் 3- ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டார் பில்கேட்ஸ்..!!

share on:
Classic

உலக பணக்காரர் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளி 2-ஆம் இடத்தை பிடித்தார் 'LVMH' நிறுவன அதிகாரி பெர்னார்ட் அர்னால்ட்.

உலக பணக்காரர்கள் பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர் பில்கேட்ஸ் 2- ஆம் இடத்திலிருந்து 3 ஆம் இடத்திற்கு பின்னுக்கு தள்ளி இருப்பதாக ப்ளும்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது பிரான்ஸ் நாட்டின் எல்விஎம்எச் நிறுவன அதிகாரி 2- ஆம் இடத்தை பிடித்திருப்பதாக தெரிவித்துள்ளது. பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்கு 35 பில்லியன் டாலருக்கும் அதிகமாக நன்கொடை வழங்கியுள்ளார். இதுவே இவர் பணக்காரர் பட்டியலில் இருந்து பின்னுக்கு தள்ளப்பட்டதற்கு காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில் அமேசான் நிறுவனத் தலைவர் 125 பில்லியன் டாலர் வைத்துள்ள நிலையில் முதலிடத்திலும், பிரான்ஸ் நாட்டின்  'LVMH' நிறுவன அதிகாரி பெர்னார்ட் அர்னால்ட் 108 டாலர் சொத்துக்களுடன் 2- ஆம் இடத்திலும், பில்கேட்ஸ் 107 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 3- ஆம் இடத்தையும் பிடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan