இலங்கை தமிழர்களை பிடிக்கவில்லை- சேரன்....?

share on:
Classic

சேரன் நாமினேட் செய்த இருவருமே இலங்கையை சேர்ந்தவர்கள்

இன்று இரவு ஒளிபரப்பாகும் பிக் பாஸ்3 நிகழ்ச்சியில், வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் இந்த வார இறுதியில் வெளியேற்றப்படுவதற்கான நாமினேஷன் வேலை துவங்க உள்ளது. இந்நிலையில் இயக்குநர் சேரன், சரவணன் ஆகியோர் சக போட்டியாளர்களை நாமினேட் செய்யும் ப்ரொமோ வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில் சேரன், தர்ஷன் மற்றும் லாஸ்லியாவை நாமினேட் செய்கிறார், அதற்கு சேரன் கூறும் காரணம் அந்த இரண்டு பேரும் எந்த முகமுமே இல்லாமல் இருக்கிறார்கள், இந்த முகங்களுக்கு இடையே வேண்டாம் என்பது என் கருத்து என்று சேரன் பிக் பாஸிடம் தெரிவிக்கிறார்.

மேலும் சரவணன், சேரன் மற்றும் பாத்திமா பாபு ஆகியோரை நாமினேட் செய்துள்ளார். அதற்கு சரவணன் கூறும் காரணம், சேரன் டாமினேட் செய்கிறார். அவர் இயக்குநர் என்பதை இங்கேயும் நிரூபிக்க நினைக்கிறார். பாத்திமா பாபு எல்லா விஷயத்திலும் குறுக்கிடுகிறார் என்று அவர்களை நாமினேட் செய்ததற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் சரவணன்.

கடைசியாக வனிதா, சேரனை நாமினேட் செய்தார். ஆக, இதுவரை இரண்டு பேர் சேரனை நாமினேட் செய்துள்ளனர். ஆனால் சேரன் தர்ஷன் மற்றும் லாஸ்லியாவை நாமினேட் செய்வார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. வனிதா சேரனை தனது அப்பா போன்றவர் என்று கூறி நாமினேட் செய்தார். சேரனோ லாஸ்லியாவை தனது மகள் என்று கூறிவிட்டு நாமினேட் செய்துள்ளார். குறிப்பாக சேரன் நாமினேட் செய்த இருவருமே இலங்கையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.

News Counter: 
100
Loading...

Padhmanaban