அந்த கூட்டணியில் நாங்கள் இல்லை - நவீன் பட்னாயக் அறிவிப்பால் சலசலப்பு

Classic

மஹாகத்பந்தன் கூட்டணியில் பிஜு ஜனதா தளம் இல்லை என்று நவீன் பட்னாயக் தெரிவித்துள்ளார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக தயாராகி வரும் பிஜேபி இல்லாத இந்த கூட்டணியில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக அரசை வீழ்த்துவதே இதன் கொள்கையாக உள்ளது. இந்நிலையில் பிஜு ஜனதா தளம் இந்த கூட்டணியில் இல்லை என்று அக்கட்சியின் தலைவரான நவீன் பட்னாயக் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மற்றும் பிஜேபி-யிலிருந்து சம தூரத்தில் விலகியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய நவீன் பட்னாயக் இந்தக் கூட்டணி குறித்து முடிவெடுக்க கால அவகாசம் தேவை என்று கூறியிருந்த அவர் தற்போது பிஜு ஜனதா தளம் கூட்டணியில் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
 

News Counter: 
100
Loading...

aravind