மம்தா புகைப்படத்தை வைத்து அவதூறு செய்த பாஜக பெண் ஜாமீன் கோரி மனு..!

share on:
Classic

மம்தா பானர்ஜி படத்தை வைத்து அவதூறு செய்த பா.ஜ.க பெண் பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாஜக இளைஞரணி தலைவர் பிரியங்கா சர்மா. இவர் சமீபத்தில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் புகைப்படத்தை, நடிகை பிரியங்கா சோப்ராவின் படத்துடன் மார்ஃபிங் செய்து இணைத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இது தொடர்பாக, காவல் நிலையத்தில் அவர் மீது அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து, கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்நிலையில், அவருக்கு ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விடுமுறை கால நீதிபதிகள் அமர்வு இன்று அவசரமாக விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind