தமிழகத்தில் ஒரு இடம் கூட பெற முடியாத பாஜக : திமுக சாதனை படைத்தது எப்படி..?

share on:
Classic

நாடு முழுவதும் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழ்நாட்டில் ஒரு இடம் கூட பெறமுடியவில்லை, திமுக சாதனை எப்படி சாத்தியமானது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

தமிழகத்தில் 38 தொகுதிகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டனி 37 இடங்களிலும் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. அதில் சிதம்பரம், தருமபுரி ஆகிய 2 தொகுதிகளை தவிர மீதமுள்ள 35 தொகுதிகளிலும் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 4 வேட்பாளர்கள் 60 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகளையும், 23 வேட்பாளர்கள் 50 - 60 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளையும், 10 வேட்பாளர்கள் 40 - 50 சதவீதத்திற்கு கூடுதலான வாக்குகளையும் பெற்றுள்ளனர். 

மத்திய அரசு மற்றும் மோடிக்கு எதிரான பிரச்சாரத்தை தேர்தலுக்கு முன்பே திமுக தலைவர் ஸ்டாலின் மக்களின் மனதில் பதியவைத்துவிட்டார். மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது என்ற திமுகவின் பிரச்சாரம் மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்துவிட்டது” என்று ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அஜய் குடர்வதி தெரிவித்துள்ளார். மேலும் ஒக்கி புயலால் பாதித்த கன்னியாகுமரி, கஜா புயலால் பாதித்த டெல்டா மாவட்டங்களை மோடி பார்வையிடாடது குறித்தும் ஸ்டாலின் கேள்வியெழுப்பியதை சுட்டிகாட்டிய அவர் இதுகுறித்து பாஜக பதிலளிக்கவில்லை என்றும் அஜய் கூறினார். 

கல்வியறிவு மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருப்பதால், தேர்தல் நேரங்களில் மக்கள் தங்கள் பிரச்சனைகளை சிந்தித்து தீர்க்கமான முடிவுகளை எடுப்பதாக தெரிவித்த பேராசிரியர் அஜய், வடமாநிலங்களில் வாக்காளர்கள் மதத்தின் பெயரால் திசை திருப்பப்படுகின்றனர் என்றும் தெரிவித்தார். ஆனால் தமிழகத்தில் அதனை பாஜகவால் செய்ய முடியாது. 

தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய 3 தென்மாநிலங்கள் மட்டுமே பாஜகவால் கால்பதிக்க முடியாத இடங்களாக உள்ளன. குறிப்பாக திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தால் தமிழகத்தில் பாஜகவின் கனவு நீண்ட நாட்களாக நிறைவேறாமல் உள்ளது. விவசாய நிலங்களை அழிக்கும் வகையில் திட்டங்களை கொண்டு வந்தது, நீட் தேர்வு ஆகியவை அதிமுக, பாஜக மீதான மக்களின் கோபத்தை அதிகமாக்கியதாக திமுக மூத்த தலைவர் தெரிவித்துள்ளார். அதிமுக தேர்தல் ஆதாயத்திற்காக கடைசி நிமிடத்தில் கூட்டணி அமைத்ததும் ஒரு காரணம் என்று திமுகவினர் கூறுகின்றனர். 

 

News Counter: 
100
Loading...

Ramya