ஓட்டுவங்கிக்காக பாஜக இந்து மக்களை ஏமாற்றி பித்தலாட்டம் செய்துவருகிறது - நாராயணசாமி

share on:
Classic

தேசத் தந்தை காந்தியை படுகொலை செய்தவரை ஆதரிக்கும் கட்சி பா.ஜ.க, ஓட்டுவங்கிக்காக இந்து மக்களை ஏமாற்றி பித்தலாட்டம் செய்துவருகிறது என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். 

சென்னை விமான நிலையத்தில்  செய்தியாளார்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார். மேலும் பேசிய அவர் “ நாட்டிற்காக போராடி சுதந்திரம் வாங்கிக்கொடுத்த, தேசத்தந்தை அண்ணல் காந்தியடிகளை சுட்டுக்கொன்றவருக்கு சிலை வைத்துள்ளவர்கள் பற்றி என்ன சொல்வது. அதற்கு ஒரு இயக்கம், அந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு ஆதரவு கொடுப்பவர்கள் பாஜகவினர். நாட்டில் இந்துக்கள் மட்டும் இருக்க வேண்டும், மற்றவர்கள் யாரும் இருக்க கூடாது என்று சொல்வது அடிமுட்டாள்தனம், இதனை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஓட்டுவங்கிக்காக, இந்து மக்களை ஏமாற்றி செய்யும் பித்தலாட்டம் தவிர வேறெதுவும் இல்லை” என்று தெரிவித்தார். 

News Counter: 
100
Loading...

Ramya