"பா.ஜ.க வரலாறு காணாத வெற்றியைக் கண்டுள்ளது"

share on:
Classic

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க வரலாறு காணாத வெற்றியைக் கண்டுள்ளதாக பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வன்னியர் சங்க தலைவர் மறைந்த ஜெ குரு நினைவு தினத்தை முன்னிட்டு திண்டிவனம் அடுத்துள்ள கோனேரிக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் ராமதாஸ், மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க வரலாறு காணாத வெற்றியை கண்டுள்ளதாகக் கூறினார். இரண்டாவது முறையாக பிரதமராகும் மோடிக்கு மருத்துவர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்தார்.

 

News Counter: 
100
Loading...

aravind