காங்கிரஸின் 55 ஆண்டுகள் சாதனையை வெறும் 55 மாதங்களில் முறியடித்த பாஜக - பிரதமர் மோடி பெருமிதம்

share on:
Classic

55 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்யாததை வெறும் 55 மாதங்களில் பாஜக செய்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். 

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்திற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி பேசினார். அப்போது, நாடாளுமன்ற தேர்தலில் ஆரோக்கியமான போட்டியை வரவேற்பதாக கூறிய அவர், இளைஞர்கள் அனைவரும் தவறாது தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்றார். விமர்சனம் செய்ய வேண்டும் என்பதற்காக நாட்டை எதிர்க்கட்சிகள் குறை கூறுவதை ஏற்க முடியாது என்று மோடி தெரிவித்தார். காங்கிரஸ் ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை என்றும், காங்கிரஸ் வம்சத்திற்கு பிறகு நாட்டில் அனைத்தும் நடந்துள்ளதாக அவர் கூறினார். 55 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்யாததை வெறும் 55 மாதங்களில் பாஜக செய்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். காங்கிரஸின் 55 ஆண்டு கால ஆட்சியில் 38 சதவீத மக்களுக்கு சுகாதார வசதிகள் செய்யப்பட்டதாகவும், பாஜகவின் 55 மாத ஆட்சியில் சுகாதார வசதிகள் 98 சதவீத மக்களை சென்றடைந்துள்ளதாக கூறினார். பொருளாதாரத்தில் உலகளவில் இந்தியா 11ஆவது இடத்திலிருந்து 6ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். காங்கிரஸின் 55 ஆண்டு கால ஆட்சியில் 12 கோடி மக்களுக்கு எரிவாயு சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டதாகவும், பாஜகவின் 55 மாத ஆட்சியில் 13 கோடி மக்களுக்கு எரிவாயு சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மோடி தெரிவித்தார். 2010 காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் போது இந்திய வீரர்கள் பதக்கம் வெல்ல கடுமையாக உழைத்து கொண்டிருந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சியினர் செல்வத்தை திரட்டிக் கொண்டிருந்ததாக மோடி விமர்சித்தார்.

News Counter: 
100
Loading...

aravind