"மதக்கலவரங்களை ஏற்படுத்தியது பா.ஜ.க" - பிரகாஷ் காரத்

share on:
Classic

மக்களை பிளவுபடுத்தி, மதக்கலவரங்களை ஏற்படுத்தியது பா.ஜ.க. என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.

மக்களை பிளவுபடுத்தி, மதக்கலவரங்களை ஏற்படுத்தியதை தவிர, மோடி அரசு வேறு எந்த சாதனையும் செய்யவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை கூழு உறுப்பினர் பிரகாஷ்காரத் குற்றம்சாட்டினார். கோவை சிங்காநல்லூர் பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடந்த பிரசாரக் கூட்டத்தில், பங்கேற்றுப் பேசிய அவர், “பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீது நம்பிக்கையில்லை” எனவும், “பாஜக இந்திய அரசியலமைப்பு சட்டத்தை குழி தோண்டி புதைக்க முயற்சிக்கிறது” என்றும் குற்றம்சாட்டினார்.

News Counter: 
100
Loading...

Ragavan