பாஜக சார்பில் போட்டியிடும் 24 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு...

share on:
Classic

மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 24 வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

மக்களவை பொதுத் தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி மே 19-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சி பல்வேறு கட்டங்களாக அறிவித்து வருகிறது. அந்த வகையில், தற்போது, பாஜக 24 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் ஹரியானா மாநிலத்தில் 8 தொகுதிகள் அடங்கியுள்ளன. பாஜக இதுவரை மொத்தம் 407 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

Ragavan