பச்சைக்கொடிகள் பற்றிய பாஜக தலைவரின் சர்ச்சை பேச்சு : எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்..

share on:
Classic

பாகிஸ்தானில் இருப்பதை போன்ற உணர்வை தருவதால், பச்சை கொடிகளை தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும் என்று பாஜக தலைவர் கூறியிருப்பது சர்ச்சைய ஏற்படுத்தியுள்ளது. 

பாஜக தலைவரும், மத்திய இணையமைச்சருமான கிரிராஜ் சிங்  பீகாரில் செய்தியாளர்களிடம் பேசிய போது முஸ்லீம்கள் தொடர்பான அரசியல், மத அமைப்புக்கள் தொடர்பான தோற்றத்தை பச்சை கொடிகள் அளிப்பதால் அவற்றை தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும் இந்த வகையான கொடிகள் சமூகத்தில் வெறுப்புணர்வை வளர்ப்பதாகவும், பாகிஸ்தானில் இருப்பதை போன்ற உணர்வை அளிப்பதாகவும் அவர் கூறினார். அவரின் இந்த சர்ச்சை கருத்துக்கு ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உடனடியாக கண்டனம் தெரிவித்த நிலையில், அது கிரிராஜின் சொந்த கருத்து என்று தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதுதொடர்பாக பேசிய ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் செய்தி தொடர்பாளர் அவருக்கு கிரிராஜ் என்ற பெயருக்கு பதிலாக விஷராஜா என்ற பெயர் இருந்திருக்கலாம். அவர் எப்போது பேசினாலும் விஷம தன்மையாக பேசுகிறார் என்று தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியும் தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளது. அரசியலுடன் மதத்தை இணைத்து பேசுவதால் அவர் மீது தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

News Counter: 
100
Loading...

Ramya