தபால் வாக்குகளில் நாடு முழுவதும் பாஜக முன்னிலை : தமிழகத்தில் திமுக முன்னிலை..

share on:
Classic

தபால் வாக்குகள் எண்ணிக்கையில் நாடு முழுவதும் பாஜக முன்னிலை வகிக்கிறது. 

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணிக்கை நடைபெறுகிறது. காலை 8.40மணி நிலவரப்படி நாடு முழுவதும் 165 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 65 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மற்றக்கட்சிகள் 13 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. காங்கிரஸ் தலைவர் போட்டியிடும் தொகுதிகளில் ஒன்றான வயநாட்டில் ராகுல்காந்தி முன்னிலையில் உள்ளார். எனினும் காங்கிரஸ் மூத்த தலைவர் திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூர் பின் தங்கியுள்ளார். உத்திரப்பிரதேசத்தில் மகாகத்பந்தன் கூட்டணி முன்னிலை வகிக்கிறது. ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெல்லாட்டின் மகன் வைபவ் கெல்லாட் பின் தங்கியுள்ளார். அதே நேரத்தில் தமிழகத்தில் திமுக முன்னிலையில் உள்ளது. தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை வகிக்கிறார். சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஹெச். ராஜா பின் தங்கியுள்ளார்.

இதனிடையே தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் முடங்கியது. தேர்தலுக்கு பொறுப்பேற்க கூடிய தன்னாட்சி அமைப்பாக விளங்கும் ஆணையத்தின் முடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News Counter: 
100
Loading...

Ramya