மக்களவையின் இடைக்கால சபாநாயகராக வீரேந்திர குமார் தேர்வு..!

share on:
Classic

மக்களவையின் இடைக்கால சபாநாயகராக பாஜக எம்.பி வீரேந்திர குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் வருகிற 17-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதிவரை நடைபெற இருக்கிறது. அன்றைய தினத்தில் இடைக்கால சபாநாயகர் நியமிக்கப்பட்டு, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் சபாநாயகர் முன்பு பதவியேற்று கொள்வது வழக்கம். அதேபோல், வருகிற 19-ஆம் தேதி நிரந்தர சபாநாயகருக்கான தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்காலிக சபாநாயகராக, மகாராஷ்டிரா மாநிலத்தின் மக்களவை உறுப்பினரான வீரேந்திரகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். பாஜக எம்.பியான இவர், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களுக்கு இவர், ஜூன் 17 மற்றும் 18-ஆம் தேதிகளில் பதவி பிரமாணம் செய்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan