இன்று தொடங்குகிறது பாஜக தேசிய கவுன்சில் கூட்டம்

share on:
Classic

பாஜக தேசிய கவுன்சில் கூட்டம் டெல்லியில் இன்று தொடங்க உள்ளது.

பாஜக தேசிய கவுன்சில் கூட்டம் டெல்லியில் இன்று தொடங்கி 2 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தொடங்கிவைக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து, வரும் சனிக்கிழமை நடைபெற உள்ள கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார். அப்போது மக்களவை பொதுத் தேர்தலை சந்திப்பது தொடர்பான திட்டங்கள் வெளியிடப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் தேசிய கவுன்சில் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கான நலத்திட்டங்கள், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளன.

News Counter: 
100
Loading...

sasikanth