காஷ்மீரில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி - மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணி உடைந்தது

Classic

காஷ்மீரில் மெகபூபா முஃப்தி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெறுவதாக பா.ஜ.க அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் கடந்த 2014 -ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மெகபூபா முஃப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி 28 இடங்களையும், பா.ஜ.க 25 இடங்களையும் கைப்பற்றியது. 

யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், நீண்ட இழுபறிக்குப் பிறகு பிடிபி - பா.ஜ.க கூட்டணி அமைத்து மெகபூபா முஃப்தி தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது.  

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க வைச் சேர்ந்த ராம் மாதவ், காஷ்மீரில் வன்முறையும், தீவிரவாதமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டினார். 

மக்களின் பாதுகாப்பை மாநில அரசு உறுதி செய்யாததால் அரசுக்கு அளித்த வந்த ஆதரவை திரும்ப பெறுவதாகவும் அவர் கூறினார். இதனால், ஜம்மு - காஷ்மீரில் பிடிபி - பா.ஜ.க கூட்டணி ஆட்சி முடிவுக்கு வர உள்ளது.
 

News Counter: 
100
Loading...

sankaravadivu