புல்வாமா தாக்குதலை பாஜக அரசியலாக்குகிறது : சீதாராம் யெச்சூரி கடும் விமர்சனம்

share on:
Classic

புல்வாமா தீவிரவாத தாக்குதலை மக்களவை தேர்தலுக்காக பாஜக அரசியலாக்குகிறது என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி விமர்சித்துள்ளார்.

இது குறித்து சீதாராம் யெச்சூரி பேசிய போது “ புல்வாமா தீவிரவாத தாக்குதலை பாஜக அரசியலாக்குகிறது. தேர்தல் பொதுக்கூட்டத்தில் இந்த தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுப்போம், ஏனென்றால் இது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி இல்லை என்று பாஜக தலைவர் கூறுகிறார். அவர்களுக்கு பொறுப்பு இருக்க வேண்டும். பாஜக கடந்த 4 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள நிலையில் இந்த சம்பவம் எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து அவர்கள் ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் இந்த மோசமான தாக்குதல் சம்பவத்தை தேர்தலுக்காக பயன்படுத்துவது நாட்டின் பாதுக்காப்பிற்கு உகந்ததாக இருக்காது” என்று தெரிவித்தார்.

கடந்த 17-ம் தேதி அசாமில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் அமித் ஷா புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் தியாகம் வீண் போகாது, ஏனெனில் இங்கு மத்தியில் ஆட்சியில் இருப்பது காங்கிரஸ் ஆட்சி இல்லை, பாஜக ஆட்சி என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சவூதி இளவரசரின் இந்தியா வருகை குறித்தும் சீதாராம் யெச்சூரி கேள்வி எழுப்பினார். பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய உதவி செய்து விட்டு இந்தியா வந்த சவூதி இளவரசரை ஏன் பிரதமர் நேரில் சென்று அவரை வரவேற்றார் என்றும் அவர் சீதாராம் யெச்சூரி கேள்வி எழுப்பினார். 
 

News Counter: 
100
Loading...

Ramya