பாஜக ஆட்சியில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் சம்பவங்கள் பன்மடங்கு அதிகரிப்பு..

share on:
Classic

பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர் மீதான் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஜார்கண்ட மாநிலத்தில் உள்ள கர்சவான் மாவட்டத்தில், கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை, தப்ரெஸ் அன்சாரி என்ற நபர், இந்து அமைப்பினரால் கடுமையாக தாக்கப்பட்டார். திருடியதாக அவர் மீது எழுந்த சந்தேகத்தின் பேரில், அவரை ஒரு கம்பத்தில் கட்டிவைத்து, பல மணி நேரம் இரக்கமில்லாமல் தாக்கிய பின்பு அவரை காவல்துறையில் ஒப்படைத்துள்ளனர். சமூக வலைதளங்களில் இதுதொடர்பான வீடியோ வைரலானது, அதில் ஜெய்ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான் போன்ற முழக்கங்களை எழுப்ப சொல்லி அவரை வற்புறுத்தியுள்ளனர். 

கடந்து சனிக்கிழமை அன்சாரி உயிரிழந்ததை தொடர்ந்து, இந்த தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய போலீசார், மருத்துவர்கள் உட்பட அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயிரிழந்த அன்சாரியின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். காயமடைந்த அன்சாரிக்கு சரியான சிகிச்சை வழங்க போலீசார் எந்த ஏற்பாடும் செய்யவில்லை எனவும் அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்வத்தில் 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர், மேலும் 2 போலீசாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். எனினும் இதுபோன்ற தாக்குதல் இந்த ஆண்டில் நடப்பது இது முதல்முறையல்ல என்று பாஸ்ட்செக்கர் (FastChecker) என்ற இணையதளம் வெளியிட்டுள்ள தகவல் மூலம் தெரியவந்துள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற 11-வது தாக்குதல் எனவும், இதுவரை இதுபோன்ற மதவெறி தாக்குதல்களில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 22 பேர் காயமடைந்ததாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்ற வெறுக்கத்தக்க குற்றச்சம்பவங்கள் 297 நடந்துள்ளன. அவற்றில் 98 பேர் உயிரிழந்ததுடன், 722 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல்கள் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்து வருகிறது. 2012-2014 காலக்கட்டத்தில் வெறும் 6 சம்பவங்கள் மட்டும் நிகழ்ந்த நிலையில் 2015-க்கு பிறகு 121 தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. 2009 -2019 வரையிலான அனைத்து தரவுகளின் அடிப்படையில் நடைபெற்ற தாக்குதல்களில் 59% முஸ்லீம்கள் பாதிக்கப்பட்டனர் என்று தெரியவந்துள்ளது.

மேலும் கால்நடைகள் திருட்டு மற்றும் இறைச்சிக்காக 28% தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. அதேபோல் இந்த வகையான தாக்குதல்கள் பாஜக ஆளும் மாநிலங்களில் 66 சதவீதமும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் 16% சதவீதமும் நடைபெற்றுள்ளன எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

News Counter: 
100
Loading...

Ramya