கோட்சே தீவிரவாதி அல்ல என்பதை பாஜக நிரூபிக்க வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்..

share on:
Classic

கோட்சே தீவிரவாதி அல்ல என்பதையோ, அவர் இந்து அல்ல என்பதையோ பாஜக நிரூபிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. 

மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியகுழு உறுப்பினர் வாசுகி, நாதுராம் கோட்சே தீவிரவாதி அல்ல என்பதை பா.ஜ.க. நிரூபிக்கவேண்டும் என வலியுறுத்தினார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். காந்தியை கொன்ற நாதுராம் கோட்சே தீவிரவாதி என்பது உண்மை, அவர் இந்து மதத்தை சேர்ந்தவர் என்பது உண்மை, இதை தான் கமல்ஹாசன் கூறியதை அவர் சுட்டிக்காட்டினார். ஒருவேளை பாஜக, ஆர். எஸ், எஸ் இதற்கு மறுப்பு தெரிவித்தால் அவர்கள் கோட்சே தீவிரவாதிகள் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும், அல்லது கோட்சே இந்து மதத்தை சேர்ந்தவர் அல்ல என்பதை நிரூபிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இதன் மூலம் தான் கமல்ஹாசன் சொன்னது உண்மையில்லை என்பதை தெளிவுப்படுத்த முடியும் என்ற கருத்தையும் அவர் முன்வைத்தார்.
 

News Counter: 
100
Loading...

Ramya