பாஜகவில் உள்ள பெண் தலைவர்கள் பயத்தில் உள்ளனர் : மாயாவதி விமர்சனம்..

share on:
Classic

பாஜகவில் உள்ள பெண் தலைவர்கள் பயத்தில் உள்ளதாக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார். 

டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் “ பாஜகவில் உள்ள திருமணமான பெண்கள் தங்கள் கணவர்கள் மோடியை சந்திக்க கூடாது என பயப்படுகின்றனர். தன் மனைவியை விட்டு மோடி பிரிந்தது போலவே, தங்கள் கணவர்களும் பிரிந்து சென்று விடுவர் என்பதே அந்த பயத்திற்கு காரணம். அரசியல் காரணங்களுக்காக தன் சொந்த மனைவியை விட்டு வந்த மோடி, எப்படி மற்றவர்களின் சகோதரிகளையும், மனைவிகளையும் மதிப்பார். அல்வர் கூட்டு வன்புணர்வு சம்பவம் தொடர்பாக இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் அமைதியாக உள்ள மோடி, இந்த விவகாரத்தில் அருவருக்கத்தக்க அரசியல் செய்து வருகிறார். எனவே இந்த தேர்தலில் அவரின் கட்சி அடையாளம் கண்டுகொள்ளப்படும். இது வெட்கப்பட வேண்டிய ஒன்று. ” என்று தெரிவித்தார். 

முன்னதாக நேற்று உத்திரப்பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அல்வர் வழக்கில் மாயாவதி முதலைக்கண்னீர் வடிப்பதாக விமர்சித்தார். உண்மையில் அவருக்கு இவ்விவகாரத்தில் அக்கறை இருந்தால், ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசுக்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக்கொள்ள தைரியம் உள்ளதா என்று கேள்வியெழுப்பினார். அவரின் இந்த கருத்துக்கு தற்போது மாயாவதி பதிலளித்துள்ளார்.

News Counter: 
100
Loading...

Ramya