கமல் ஹாசனுக்கு எதிரான பா.ஜ.க.வின் வழக்கு தள்ளுபடி..!

share on:
Classic

கமல் ஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பா.ஜ.க வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட கமல் ஹாசன் நாட்டின் முதல் தீவிரவாதி இந்து என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். கமலின் இந்த கருத்து தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பா.ஜ.க வினர் இடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், மத உணர்வுகளை தூண்டும் வகையில் பேசியதாக பா.ஜ.க வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாயா டெல்லி உயர்நீதிமன்றத்தில் கமல் ஹாசன் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழகத்தில் நடந்த விவகாரத்திற்கு டெல்லியில் வழக்கு தொடர்ந்தது ஏன் என கேள்வி எழுப்பினர். மேலும், இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாகவும் உத்தரவிட்டனர்.

News Counter: 
100
Loading...

Ragavan