கர்நாடகா எம்.எல்.ஏ வீட்டின் முன்பு குண்டு வெடிப்பு : ஒருவர் பலி..

share on:
Classic

கர்நாடகாவில் உள்ள ராஜராஜேஸ்வரி நகர் எம்.எல்.ஏ முனிரத்னாவின் வீட்டின் முன்பு வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலியானார். 

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ முனிரத்னாவின் வீட்டின் முன்பு அமைக்கப்பட்டுள்ள கார் நிறுத்துமிடத்தில் திடீரென குண்டு வெடித்தது. இதில் வெங்கடேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து அப்பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பில் பலியானவரது உடல் மீட்டக்கப்படு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு தொடர்பாக அப்பகுதி காவல்துறையினர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

News Counter: 
100
Loading...

Ramya