இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு : பதற்றம் மேலும் அதிகரிப்பு..

share on:
Classic

இலங்கையின் கொழும்பு நகரில் இன்று மீண்டும் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. 

இலங்கை தலைநகர் கொழும்புவில் புகோடா நகரில் உள்ள நீதிமன்றத்திற்கு பின்புறம் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது என்ற காவல்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். இதில் உயிரிழப்புக்கள் எதுவும் நிகழவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

இதனிடையே கொழும்பு விமானநிலையம் அருகே நிறுத்திவைக்கப்பட்ட வேனில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலின் பேரில் அங்கு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியில் சாலை வசதி துண்டிக்கப்பட்டு, பொதுமக்களின் போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டது. பாதுகாப்பு கருதியே சோதனை மேற்கொள்ளப்படுவதாகவும், இதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இலங்கை முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 359 உயிரிழந்தனர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அங்கு உச்சக்கட்ட பதற்றம் நிலவி வரும் சூழலில் இன்று குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. 
 

News Counter: 
100
Loading...

Ramya