இரத்த தானம் பற்றிய தகவல்கள்...!!

share on:
Classic

மனித உடலில் சராசரியாக 5 லிட்டர் ரத்தம் இருக்கும். ரத்த தானத்தின்போது 350 மில்லி மட்டுமே எடுக்கப்படுகிறது. ஒருவர் தானமாகக் கொடுக்கும் ரத்தத்தின் மூலம் 3 பேரைக் காப்பாற்ற முடியும்.

இரத்தம் கொடுக்கும் முறைகள் :
18 முதல் 60 வயதுக்கு உட்பட்ட யார் வேண்டுமானாலும் ரத்த தானம் செய்யலாம். ஆண்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறையும் பெண்கள் 4 மாதங்களுக்கு ஒருமுறையும் ரத்தத் தானம் செய்யலாம். இரத்தம் அளிப்பவரின் எடை 45 கிலோவிற்கு குறையாமல் இருக்க வேண்டும்.

யாரெல்லாம் இரத்தம் தரக்கூடாது :

  • டைபாய்டு, மலேரியா போன்ற காய்ச்சல் வந்தவர்கள்,  சிகிச்சை பெற்று ஆறு மாதங்கள் வரை ரத்தத் தானம் செய்யக் கூடாது.
  • மது அருந்தியவர்கள் அடுத்த 24 மணி நேரம் வரை ரத்தம் அளிப்பது தவறு
  • எச்.ஐ.வி., மஞ்சள் காமாலை தொற்றுள்ளவர்களின் ரத்தத்தைப் பெறக்கூடாது.
  • இதயநோய், காசநோய், வலிப்புநோய் உடையவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், புற்றுநோயாளிகள் எப்போதும் ரத்ததானம் செய்யக்கூடாது.

இரத்தம் எடுப்பவர்கள் செய்ய வேண்டியவை :
வழக்கம் போல் அவர்கள் கையுறை அணிந்திருக்க வேண்டும். மனதளவில் வலிமை கொண்டவர்களாக இருக்க வேண்டும் . ரத்த பைகளை கவனமாக கையாள வேண்டும். இது போன்ற இரத்த தானம் செய்யும் போது நம் உடலில் புதிய இரத்த அணுக்கள் உருவாகி உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan