போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களுக்கு இந்தியாவில் தடை

share on:
Classic

சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை தரையிறக்குவதற்கு இந்தியாவும் தடை விதித்துள்ளது.

எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் கடந்த திங்கட்கிழமை விபத்துக்குள்ளானது. இதில் 157 பேர் பலியாகினார். இதேபோல் இந்தோனேஷியா ஏர் லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங்க 737 மேக்ஸ் 8 ரக விமானம் கடந்த அக்டோபர் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 189 பேர் உயிரிழந்தனர். இந்த இரண்டு விமானங்களும் பறக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இதையடுத்து இந்த ரக விமானங்களை இயக்குவதற்கு சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் தடை விதித்திருந்தது. 

இந்நிலையில், போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை இந்தியாவில் இயக்கலாமா என்பது குறித்து போக்குவரத்து அமைச்சகம், விமானத் துறை இயக்குனரகத்துடன் ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனைக்கு பின் விமானப் போக்குவரத்து அமைச்சகம், இந்தியாவிலும் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களுக்கான தடை அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்வரை இந்த தடை அமலில் இருக்கும் என்றும், மாலை 4 மணிக்குள் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் அனைத்தையும் தரையிறக்க வேண்டும் எனவும்  உத்தரவிட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

sajeev