விமான விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு உதவ நிதி ஒதுக்கிய போயிங் நிறுவனம்..!

share on:
Classic

போயிங் நிறுவனம் தனது 737 மேக்ஸ் ரக விமான விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு உதவ 100 மில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. 

போயிங் நிறுவனம் தயாரித்த ‘737 மேக்ஸ்’ரக விமானம் தொடர்ந்து 5 மாத இடைவெளியில் அடுத்தடுத்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 346 பேரும் பலியாகினர். அதனை தொடர்ந்து பல நாடுகளின் விமான நிறுவனங்கள் ‘737 மேக்ஸ்’ விமான பயன்பாட்டை நிறுத்திவிட்டன. 

இந்த விபத்துகளில் உயிர் இழந்தோரின் குடும்பத்தினர் பலர் போயிங் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் போயிங் நிறுவனம் தனது 737 மேக்ஸ் ரக விமான விபத்தில் உயிர் இழந்தோரின் குடும்பத்துக்கு உதவ இந்திய மதிப்பில் சுமார் 688 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind